|
203. தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல் |
|
"கழுகுமலை குருவிகுளம்" என்ற மெட்டு வகை |
ப. |
| இந்தியை ஏன்கற்க வேண்டும் | | என்அம்மா என்அப்பா நான் (இந்தி) |
|
உ.1 |
| என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா | | பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி) |
|
2 |
| அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் | | வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி) |
|
3 |
| அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் | | உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து (இந்தி) |
|
4 |
| வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில் | | அறிவியற்கே நிறைவிலா அரியகாலம் பயனறவே (இந்தி) |
|
5 |
| ஆரியத்தால் செந்தமிழ் அடைந்ததுபல் கேடுகள் | | சீரியநல் எச்சமும் சிதையும்வகை மதியிலாது (இந்தி) |
|
6 |
| இந்தி யில்லாப் பள்ளியே இந்தநாட்டில் இல்லையேல் | | அந்த நாள் வரும்வரை அகத்திருந்தே கற்றிடுவேன் (இந்தி) |
|
7 |
| மானமும்தன் மானமும் மருவுதமிழ் மாணவர் | | தானையிலே சேர்ந்துநான் தண்டமிழைக் காத்திடுவேன் (இந்தி) |
|