|
204. இந்திப்போருக் கழைப்பு |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
1 |
| தண்டமிழ்த்தாய் தன்னைக் காக்க வா வா வா | | தமிழனென்று தன்னைச் சொல்வோன் வா வா வா | | தண்டெடுத்து மண்டு போர்க்கு வா வா வா | | தன்னலமில் லாமல் இன்னே வா வா வா |
|
2 |
| ஆண்மை யென்னும் பான்மை யுள்ளோன் வா வா வா | | ஐயீ ராட்டைப் பையனேனும் வா வா வா | | நாண்மை யுள்ள தாயே இன்று வா வா வா | | நன்மகற்கு வன்மை யூட்ட வா வா வா |
|
3 |
| மான முள்ள ஆசிரியன் வா வா வா | | மறமிகுந்த மாண வன்நீ வா வா வா | | ஏன மேந்தி இரக்கின் றோனும் வா வா வா | | இந்தியைத் துரத்த இன்றே வா வா வா |
|
கலித்துறை |
| கலையி ழந்தனம் கழகநூ லிழந்தனம் கடமா | | மலையி ழந்தனம் மானமி ழந்தனம் செல்வ | | நிலையி ழந்தனம் நீணில மிழந்தனம் இனியே | | தலையி ழக்கினும் தமிழையி ழக்கிலம் தகவே. |
|
|
205. மாணவரே தமிழ் காக்கும் மறவர் |
|
'பரமண்டலங்களில் வசிக்கும் எங்கள்' என்ற மெட்டு |
1 |
| மாணவரே தமிழ் மறவர் படை | | மற்றோர் யாவரும் மறந்தக்கடை | | காணவே வெற்றி கரந்தையிடை | | கைதர இந்திக்குக் கடுகிவிடை (மாண) |
|