|
| நீக்கிடின் | | பின்னர் ஆக்கமாம் | | பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கக் (புறப்படு) |
|
3 |
| அறிவியல்கள் ஆய்ந்து நல்ல அரிய பொறிகள் ஆக்கவும் | | அருமைத் தமிழுக் கெந்த வகையும் அழிவிலாது காக்கவும் | | ஆங்கிலம் | | துறை போங்கலம் | | பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கப் (புறப்படு) |
|
207. தமிழ்த்தொண்டர் படைச் செலவு |
|
'ராசன் வந்தனம்' என்ற மெட்டு |
1 |
| படையெடுக்கவே கடு நடை தொடுக்கவே | | பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத் தமிழ் மறவரே | | பாரெலாம் ஊரெலாம் | | பண்டை முத்தமிழ் பரப்புவோம் | | இடம் வலம் இடம் வலம் | | இடம் வலம் இடம் வலம் |
|
2 |
| பரவை தன்னடி தொழப் பணித்த பாண்டியன் | | பாங்கிலே வளர்ந்து பண்பில் ஓங்கு பாண்டி மறவரே | | பரண்மனை அரண்மனை | | பைந்தமிழையே பரப்புவோம் | | இடம் வலம் இடம் வலம் | | இடம் வலம் இடம் வலம் | | தூங்கெயில் கொண்ட தொடித்தோள் நற்செம்பியன் | | தோன்றி வந்த குடியின் மானம் ஈண்டு சோழ மறவரே |
|