பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்177

மண்ட லம்வ ளைந்து சென்று மண்டு கின்ற தொண்டரின்
தண்டு கள்நி ரம்ப வெங்கும் தண்ட மிழ்மு ழங்குவீர்
வெண்ட யங்கள் கிண்கி ணென்று விம்ம வென்றி கண்டிடும்
எண்டி சைக ளும்பு கழ்ந்தி டுங்க லங்கள் கொண்டிடும்.
 
209. தமிழுக்கு நற்காலக் குறி
'எந்தன் இடது தோளும்' என்ற மெட்டு
ப.
நல்ல காலந்தமிழை நண்ணி வருவதென
நான் செவியுற்றேன் நல்ல சொல் சொல் சொல் இன்றே.
து. ப.
பல்லவ புரங்கண்ட பாக்கத்து விரிச்சியும்
பாங்காயொத் திசைத்தது சில் சில் சில் என்றே
(நல்ல)
உ.1
நள்ளிர விலேசென்று தில்லை யம்பலத்திலே
நானிருந்தேன் நெஞ்சமும் நள் நள் நள் என்றே
தெள்ளிய ஒலியொன்று தேனூறத் திணிந்ததே
தென்றமிழ் உலகெலாம் தெள் தெள் தெள் என்றே
(நல்ல)
2
வைகறையி லேயொரு மெய்யெனக் கனவினில்
வந்தனள் தமிழ்மகள் வெல் வெல் வெல் என்றே
வல்லியர் சூழ நின்றோர் வாயில்லா மகளையே
வரைந்தனர் அணைநின்று செல் செல் செல் என்றே
(நல்ல)