பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்179

2
ஆங்கி லத்திலுள்ள பல அவியல்கள் - இன்று
    ஆகின்றன தமிழிலென் றாடு பாம்பே
ஈங் குளவருமே இனிச்சிறு காலத்தில் - பல
    இறும்பூது கண்டிடுவர் ஆடு பாம்பே
(ஆடு)
3
நச்சுப் பகைமை யெல்லாம் நைந்தொழிந்து - தமிழ்
     நாடொருமை நண்ணுமென்றே ஆடு பாம்பே
அச்சத்தை அடியோடும் அகற்றி விட்டுத் - தமிழ்
     ஆசிரியர் வாழுவரென் றாடு பாம்பே
(ஆடு)
212. தமிழ்க் கொடி
'கொடி பறக்குது கொடி பறக்குது' என்ற மெட்டு
ப.
கயற்கொடியிது கயற்கொடியிது கயற்கொடியிது தானடா
கயற்கணியொடு கணவன்மகனுங் கைக்கொண்டகொடி காணடா
அ.
கீழைத்தீவுக் கணத்தைவென்று கிளருந்தமிழிற் பெயரிட்டுச்
சாலித்தீவிற் கடலின்அலைகள் சாலவடிம்பை யலம்பவே
தாளைப்பொறித்துக் கரையிலிட்டுத் தழைக்கும் வணிகத் தூதினால்
மேலையவனர் தொடர்புகொண்டு மிகுந்த பாண்டிக் கொடியடா.
ப.
புலிக்கொடியிது புலிக்கொடியிது புலிக்கொடியிது தானடா
பொன்மலையடி வாழ்கோமான்கள் புடைபெயர் கொடி காணடா.