|
உ. |
| தொங்கும் எயில்கள் மூன்றெறிந்து தோற்ற வடவர் மண்டபம் | | தங்குபந்தர் வாயிலோடு தரவே கொண்டு சிறைஞராய் | | இங்குவந்த ஈழவர்கள் இலங்கு பொன்னிக் கரையிடக் | | கங்கைகொண்ட சோழன் வெற்றி கண்ட வேங்கைக் கொடியடா. |
|
ப. |
| விற்கொடியிது விற்கொடியிது விற்கொடியிது தானடா | | விளம்புவான வரம்பன் கொண்ட வெல்கொடியிது காணடா |
|
உ. |
| குமரியிருந்து பனிமிகுந்த கோடுவரையும் ஒருமொழி | | தமிழிலாண்டு பாரதத்தும் தகுந்தசோறு வழங்கியே | | திமிரரான கனகவிசயர் திணிந்ததோளிற் கல்லையே | | சுமைகொணர்ந்து சிறுமைகாணச் சொன்னசேரன் கொடியடா. |
|
|
213. தமிழ் மீண்டும் தலைமை பெறல் |
|
'கதர்க்கப்பல் கொடி தோணுதே' என்ற மெட்டு |
பண் - (நாதநாமக்கிரியை) தாளம் - (முன்னை) |
ப. |
| பைந்தமிழ்த் தேவி பார் அதோ | | பன்மொழிக் கழகத்தே பொன்மணி யரியணை (பைந்) |
|
உ. |
| பறவையுந் தோன்றுமுன்பு பலவெனும் ஊழிநின்ற | | பஃறுளிநாடு பின்பு பழையகற் காலங்கண்ட | | மொழியாகிப் | | பல்கலையாம் வழிபோகிப் | | பாண்டியன் வளர்த்த கன்னிப் (பைந்) |
|