|
216. தமிழைக் காக்கும் வழிகள் |
|
'தெண்டனிட்டேன் அடியேன்' என்ற மெட்டு |
பண் - தோடி தாளம் - முன்னை |
ப. |
|
து. ப. |
| இரு - வகைபடு தமிழ்உயர் தகையொடு நிலைபெற (வகுத்) |
|
உ.1 |
| தகவுற முதல்தமிழ் அகம்தமிழ் நாடெனத் | | தாங்குக பெயர்அதில் ஓங்கியமொழி தன்னால் | | மிகவுற மொழிகலை தொகுதமிழ்ப் பண்பாடு | | மேனாளின் மாட்சிபெறத் தானே தன்னாட்சி பின்னால் (வகுத்) |
|
2 |
| உலக வழக்குமொழி கலவை நடையொழிய | | உடன்இறை வழிபாடும் உறுக தமிழ் வழிய | | இலகுநூல் வழக்கெலாம் இன்றமிழ்ச்சொல் மொழிய | | இயங்கு தமிழ்மக்களும் எங்குந்தமிழ் பொழிய (வகுத்) |
|
3 |
| வருங்காலத் தமிழகம் வரகல்வி யமைச்சராய் | | மறைமலை யடிவழி நிறைதமி ழாசிரியர் | | ஒருங்குறத் தமிழகம் உறும்பல இடங்களும் | | உயர்தனித் தமிழ்ப்பெயர் உறைபழ மாசிரியர் (வகுத்) |
|