பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்183

217. தமிழக மொழியியல் தன்னாட்சி
'நனு பாலிம்ப' என்ற மெட்டு
பண் - மோகனம்
தாளம் - முன்னை
ப.
மு(ன்)னமே வேண்டும் மொழியியல் தன்னாட்சி
     மூவேந்தர் நாடே.
து. ப.
தனிமொழித் தமிழ்தான் தலைமை பெறாவிடின்
தமிழனும் விடுதலை தனையடைந் ததேயிலை
(முனமே)
உ.
கடல்புகு குமரிக் கண்டமதில் எழுந்த
     கன்னித் தமிழ்மரபு காத்து வளர்ந்துவர
வடமொழித் தலைமை வள்ளிதாய் நீங்க
     வம்பமொழி யிந்தி வந்தவழிச் செல
(முனமே)
218. தமிழனே தமிழைக் காத்தல்
'தினமணி வம்ச' என்ற மெட்டு
பண் - அரிகாம்போதி
தாளம் - முன்னை
ப.
தமிழினைப் பேணத் தமிழனே வேண்டும்
தாழ்வற மீண்டும்
து. ப.
அமிழ்தினைக் காத்திட அமைவது பூனையோ
அமருங் கிடைக்காவல் அடவி நரியோ
(தமிழினை)
உ.
துறைதொறும் ஆரியம் துடைத்தற நீக்கி
இறைமையா யிருந்தே ஏனையர் ஏமுற
மறைமலை யடிகளின் மலரடி பின்பற்றி
நிறைபுல நக்கீரன் நெஞ்சுரங் கொண்டு
(தமிழினை)