|
219. மொழிபெயர்ப்பு முறை |
|
'சாம்பசதா சிவா' என்ற மெட்டு |
1 |
| தூய தமிழ்மொழி தூய தமிழ்மொழி | | தூய மொழியெனத் தொன்றுதொட் டொன்றே. |
|
2 |
| பிறமொழி தமிழிற் பெயர்ப்பவர் தம்முளம் | | நெறிமுறை பலவும் நிறுவுதல் வேண்டும் (தூய) |
|
3 |
| பொதுவகை யான பிறசொல் லெல்லாம் | | புதுநிலை தமிழிற் புனைசொல் லாகும் (தூய) |
|
4 |
| வலுத்1தியல் மொழியில் வருமியற் பெயரே | | எழுத்தொடு புணர்ந்த இயற்றமிழ்ச் சொல்லாம் (தூய) |
|
5 |
| ஆங்கிலந் தமிழே அன்பொடு மொழிநூல் | | அறிசொல் வல்லார் அமருக முதலே (தூய) |
|
6 |
| இயற்பொருள் ஆகு பொருள்அணி ஆட்சி | | வினைப்பொருள் தொகுசொல் எனப்பொருள் ஆறாம் (தூய) |
|
7 |
| அவ்வத் துறையின் அறிஞரைக் கலந்தே | | அதுபொருள் முறையில் ஆக்குக கலைச்சொல் (தூய) |
|
8 |
| இம்முறை தழுவின் எத்துறைச் சொல்லும் | | இன்றமிழ் மென்மெல இனிதாய் ஒல்லும். (தூய) |
|
1. வலுத்து - வலுவுகொண்டு, வலித்து |