|
229. தாய்மொழிக் கல்வி என்னும் தமிழ்வாயிற் கல்வி |
|
'அன்னையுந் தந்தையுந் தானே' என்ற மெட்டு |
ப. |
| தாய்மொழிக் கல்வியுந் தானே - தமிழ்த் | | தூய்மொழி யன்றெனில் தொடங்குவ தேனே. (தாய்) |
|
து.ப. |
| வாய்மையில் தமிழன்பு தானோ - தமிழ் | | வல்லவரை விலக்கித் தள்ளுவ தேனோ | | தேயநின் றாங்கில நீக்கம் - பின்னே | | திடுமென இந்தியைப் புகுத்தலே நோக்கம். (தாய்) |
|
அ. |
| ஆடு நனைகின்ற தென்றே - ஓநாய் | | அழுது கண்ணீர் விடுவ துண்மையோ அன்றே | | நாடியே தமிழதன் நன்றே - முன்பு | | நயவாத பேர்நயக் கின்றனர் இன்றே | | தேடியே உலகெங்குஞ் சென்றே - காணின் | | திருந்திய தூய்மொழி தீந்தமிழ் ஒன்றே | | கூடிய தூயசொல் கண்டே - பின்பு | | கோவையிற் புகுத்துக தூவுளங் கொண்டே. (தாய்) |
|
231. வண்ணனை மொழியியலின் (Descriptive Linguistics) வழுவியல் |
|
'மாதாட பாரதேனோ' என்ற மெட்டு |
பண் - கமாசு தாளம் - ஈரொற்று |
| வண்ணனை மொழியியலே - வழிமயலே |
|
உ.1 |
| முன்னமே மொழிமுதல் மூலமுண்மையைக் கண்டார் | | இந்நிலை மொழியெலாம் இடுகுறியெனக் கொண்டார் (வண்ண) |
|