|
2 |
| கண்ணிய பொருளொன்றைக் காணச் செல்வான் முன்னே | | கண்ணைக் கட்டிக்கொண்டு கால்தடுமாறல் என்னே (வண்ண) |
|
3 |
| மொழிநூலின் திறவுகோல் மூழ்கியிருக்குந் தமிழ் | | வழிதவறித் திரி வடமொழியிலே அமிழ் (வண்ண) |
|
4 |
| ஆவின் வருவதெல்லாம் அருந்திடும் பாலாகுமோ | | அமெரிக்கர் சொல்வதெல்லாம் அரியமெய்ந் நூலாகுமோ (வண்ண) |
|
5 |
| ஆரிய வெறியரும் அணையுங் கொண்டான் மாரும் | | வேரியல் தெரிவதை விலக்க வழியாய்க் கோரும் (வண்ண) |
|
6 |
| ஆங்கிலத்தைச் சிறந்த அளவையாக் கொண்டேனவும் | | ஆயிரவாண்டுள் எல்லாம் அடியோடு மாறுமென்னும் (வண்ண) |
|
7 |
| எந்தமொழியும் மாந்தர் இயம்புங் கொச்சையே யென்று | | செந்தமிழின் செம்மையைச் சிதைக்க வழியாம் இன்று (வண்ண) |
|
232. என் அண்ணாமலை பல்கலைக் கழகப் பணி |
|
'புள்ளிக் கலாப மயிற்பாகன்' என்ற மெட்டு |
1 |
| அண்ணாமலை பல்கலைக் கழகம் - என்றும் | | அருந்தமிழ் காக்கும் என்னும் உலகம் - அங்கே | | ஆரியம் வேரூன்றித் தமிழ் | | சீரழிந்து போனதாரே கண்டார் | | வெளி விண்டார். |
|