|
2 |
| திரவிட மொழியியல் துறையே - அங்குத் | | திறந்து வெள்ளிவிழா முறையே - தமிழ் | | வேர்ச்சொல் வரிசை முதலே | | சேர்ப்பதென்று விளம்பரம் செய்தார் | | தாளிற் பெய்தார். |
|
3 |
| தமிழுக்கு வந்தது நற்காலம் - என்று | | தருக்கி விடுத்தேன் வேண்டுகோளும் - தமிழ்த் | | தலைமை யிருந்தவர் அந் | | ‘நிலைமையறிந்து வழி சூழ்ந்தார் - தமிழ் கீழ்ந்தார்.1’ |
|
1. கீழ்தல் - சிதைத்தல் |
4 |
| சட்டர்சி யென்னும் வங்காளியரே - அன்று | | சமைந்த குழுவில் மாபெரியரே - தமிழ்ச் | | சார்புகொண்டென் வேலையைமேற் | | பார்வை செய்ய வந்ததலங் கோலம் | | கெடு காலம். |
|
5 |
| தமிழர் கிரேக்க நாட்டார் என்றார் - அவர் | | தமிழ்ச்சொல்லும் ஆரியமாய்க் கொண்டார் - அது | | தவறென்று விளக்கவும் | | கவனியா திழுக்கென மறுத்தார் | | மிக வெறுத்தார். |
|
6 |
| எதிரிகள் இதே யெதிர்பார்த்தார் - என்னை | | ஏனைத் துறைக்குத் தள்ளித் தீர்த்தார் - அங்கே | | இருந்து மூவாண்டின் பின்நான் | | அருந்தமிழோடு வெளியேற்றம் | | திடு மாற்றம் |
|