பக்கம் எண் :

208இசைத்தமிழ்க் கலம்பகம்

249. ஒற்றுமையுரம்
'ஆரகிம்பவே' என்ற மெட்டு
பண் - தோடி
தாளம் - ஈரொற்று
ப.
சேர்ந்து வாழ்வதே - (நம்) - சிறந்த வலிமை
து. ப.
சிறுகோலும் செறிந்து நின்றிடின் சேர்த்தொடிக்கவே ஏலுமோ.
(சேர்ந்து)
உ.1
சேர சோழ பாண்டியர்கள் சேர்ந்துநின்ற கால முழுதும்
வேறரசர் யாரும் வெல்ல விரற்கிடையும் இயன்ற தில்லை.
(சேர்ந்து)
2
மூவரால் தொண்ணூற் றெழுவர் முறியடிப்புண் டாரென் சொல்லை
ஏவர் நம்புவார் இவ்வுலகில் இதனிலும் வேறிழிவே யில்லை.
(சேர்ந்து)
3
பல்குழுவொடு பாழ் செயுட்பகை பைந்தமிழைக் கொல் குறும்பே
கல்லாமையொடு கொண்டுவந்த கட்டாய இந்தி யிங்கே.
(சேர்ந்து)
4
பென்னம்பெரிய தமிழினந்தான் பிறப்பொடு தொடர்புற்ற பல
சின்னஞ்சிறிய குலங்களாகச் சிதைந்து பழஞ்சீர் கெட்டதே.
(சேர்ந்து)