|
251. ஆரியர் தமிழர் ஒற்றுமை |
|
'வள்ளிக் கணவன் பேரை' என்ற மெட்டு |
1 |
| ஆரியர் தமிழரே வேறு பாடெதுமின்றி | | ஓரிய லாகவேண்டும் - நல்ல தங்கமே | | ஒருமித்து வாழவேண்டும். |
|
2 |
| தமிழரும் ஆரியரும் சமநிலை யுணர்வோடு | | தமிழையே தாங்கவேண்டும் - நல்ல தங்கமே | | தமிழகம் ஓங்கவேண்டும். |
|
3 |
| இந்திய வரலாறு முந்திய நிலைகூறத் | | தென்றிசை சேர வேண்டும் - நல்ல தங்கமே | | திரிதலுந் தீரவேண்டும். |
|
4 |
| நினைவு வலிமையெல்லா வினைகளுக்குமே யொன்றாய் | | முனையுந் திறமேயன்று - நல்ல தங்கமே | | முதன்மையாய்ப் பிறவுமுண்டு. |
|
5 |
| நலனாக வாழ்வதற்குக் குலவகை தீருமட்டும் | | நிலையிதே நிற்கவேண்டும் - நல்ல தங்கமே | | நேர்மையுங் கற்கவேண்டும். |
|