|
252. தாலாட்டுப் பாட்டு |
|
'கனிமொழியே எனதுயிரே' என்ற மெட்டு |
ப. |
| கண்மணியே கண்வளராய் தங்கமே தங்கம் - என் | | கனியுந்தமிழ் காதுறவே தங்கமே தங்கம் |
|
உ.1 |
| எண்ணம் எதும்இன்றி இன்றே தங்கமே தங்கம் - நீ | | இளைப்பாறித் தூங்கிவிடு தங்கமே தங்கம் | | கண்மலர்ந்த பின்னெழுந்தே தங்கமே தங்கம் - சிறு | | கால்கையசைத் தாடலாமே தங்கமே தங்கம் (கண்) |
|
2 |
| முன்னவர்முன் கடல்கடந்து தங்கமே தங்கம் - மிக | | முறியடித்தார் எதிர்த்தவரைத் தங்கமே தங்கம் | | இன்னுஞ்சில ஆண்டுகளில் தங்கமே தங்கம் - நீ | | இனியதமிழ் பரவச் செல்வாய் தங்கமே தங்கம் (கண்) |
|
3 |
| இந்தியிந்த நாட்டில்வரத் தங்கமே தங்கம் - சிலர் | | எண்ணியதும் திண்ணெனவே தங்கமே தங்கம் | | முந்தியதை யொழிக்கக் சொன்னார் தங்கமே தங்கம் - தனி | | மொழியில்மறை மலையடிகள் தங்கமே தங்கம் (கண்) |
|
4 |
| அறிவுகண்டார் தமிழர்முதல் தங்கமே தங்கம் - பின் | | ஆரியத்தால் அறிவிழந்தார் தங்கமே தங்கம் | | பொறிவினைகள் பொலியுமின்று தங்கமே தங்கம் - நீ | | புகுந்திடுவாய் திங்கள்செவ்வாய் தங்கமே தங்கம் (கண்) |
|
5 |
| எல்லவரும் ஓரினமே தங்கமே தங்கம் - இடம் | | எங்கும்ஒரே தெய்வமுண்டு தங்கமே தங்கம் | | நல்லமைதி நானிலமே தங்கமே தங்கம் - உடன் | | நண்ணியன்பு பொங்குகவே தங்கமே தங்கம் (கண்) |
|