|
253. குழந்தைக்குப் பேச்சுப் பயிற்றல் |
|
(பிள்ளைத் தமிழ் முறை) |
'சொல்லு பாப்பா' என்ற மெட்டு |
ப. |
| பேசு பாப்பா தமிழ் பேசு பாப்பா | | பேசும் அகவையிது பேசு பாப்பா |
|
உ.1 |
| பாசி பாசி என்று சொல்லிப் பயில் பாப்பா - அதைப் | | பாலென்று திருத்தவரும் காலம் பாப்பா | | சோசி யென்று சொல்லுவதும் சோறு பாப்பா - தமிழ் | | சொக்கமாகக் கொச்சையேனும் சொல்லு பாப்பா (பேசு) |
|
2 |
| அம்மா அப்பா என்று நீதான் அழைத்துவரும் - உன் | | அன்னை தந்தை யிருவரும் முன்னறி தெய்வம் | | அம்மையப்பன் என்றே ஒரே ஆண்டவனை - நீயும் | | அழைக்கின்ற காலம் அது பின்னறி தெய்வம் (பேசு) |
|
3 |
| அமிழ்தினும் இனியது தமிழ் பாப்பா - அது | | அறிவரை மயக்கிய மொழி பாப்பா | | குமுதவாய் திறந்தின்று குயில் பாப்பா - உன் | | குதலையும் இனிமையைத் தரும் பாப்பா (பேசு) |
|
4 |
| குழலும் யாழும் போலும்உன் குரல் பாப்பா - அது | | கொம்புத்தேன் போலினிக்கும் கொஞ்சு பாப்பா | | மழலை மொழி குழறும் மழ பாப்பா - அது | | மதிமிகு வள்ளுவன்சொல் மதி பாப்பா (பேசு) |
|
5 |
| எளிதாகப் பேசும் மொழிதமிழ் பாப்பா - மூச்(சு) | | இழுக்கும் வல்லொலி யதில்இல்லை பாப்பா | | தெளிவாகப் பேசி மெள்ளத் தேறு பாப்பா - பின்னர்த் | | தேவர் கண்ட நாவலனாய்த் திகழ் பாப்பா (பேசு) |
|