பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்213

254. பாங்கன் கழறலும் தலைவன் கழற்றெதிர் மறுத்தலும்
(திருக்கோவை, 20, 21, 22, 23)
(இசைந்த பண்ணிற் பாடுக)
பண் - காப்பி
தாளம் - முன்னை
1. பாங்கன் வினவல்
தகை - வாடுகின்றதும் ஏனே
தமிழ் - வயத்ததோ மனம் கோனே
இனிப் - பாடும் இன்னிசை யானே
இந்தப் - படியோ சொல்தணிப் பேனே.
2. தலைவன் விடுத்தல
மலஞ் - சோலை யோரிள மானே
கண்டு - சோர்ந்த தென்மனம் தானே
முந்து - காலை இறைவனின் மேனே
முழுக் - கருத்தும் செலுத்துவென் நானே.
3. பாங்கன் கழறல்
ஒரு - சோலை யிற்சிறு மானே
கண்டு - சோர்ந்த னைபெரு மானே
முனம் - மேலெ னும்அறி வானே
மதி - மிகவும் கூறுவை நீனே.
4. தலைவன் கழற்றெதிர் மறுத்தல்
இனித் - தோழ நான்என்ன செய்வேன்
காணாத் - தொலைவில் நின்றுநீ வைவேன்?
இந்த - வேளை நீசெலின் உய்வேன்
இன்றேல் - விரைந்துயிர் இங்கே பெய்வேன்.
       வைவு + ஏன்? = வைவேன்?