பக்கம் எண் :

214இசைத்தமிழ்க் கலம்பகம்

255. பார்ப்பார் யார்?
சித்தார் வண்ணம்
ப.
பார்ப்பார் யார் - தமிழ்ப்
பாரினில் தமிழ்நூல் பார்ப்பவரே - பிறர்
பார்ப்பனர் ஆகார் பார் பார் பார்.
து. ப.
குரு - போற்றியே உவச்சன் பூசாரி
திரு - புலவன் பண்டாரம் ஆசிரியன்
உருத் - தேற்றியே ஓதுவான் நம்பி
எனத் - திகழும் இல்லறத்தார் தான்பார்ப்பார்.
(பார்ப்பார்)
256. அந்தணர் யார்?
'வண்ணப் புறாவே நீ யார்' என்ற மெட்டு வகை
ப.
அந்தணர் என்பவர் யார் - அருள்
அறியாத பேரையே தெரியாது கூறுவீர்.
து. ப.
செந்தமிழ் மாமரபே - மெய்யாய்ச்
செப்பாத நூற்படி தப்பாகக் கூறாதீர்
(அந்தணர்)
உ.1
வெந்தன்மை நீங்கியே எந்த வுயிருக்கும்
     செந்தண்மை பூண்டோர்தாம் அந்தண ராவாரே
வந்த விருந்தினரை - வெளி
     வாயிற்காக்க வைத்தே மீயுஞ்சோற்றைக் கொட்டார்
(அந்தணர்)
2
நாய்போற் பெற்றதுண்டு தாய்போற் பெண்டிர்க்கொண்டு
    பேய்போல் திரிந்தெங்கும் சேய்நிகர்ப்பார் ஐயர்
நாயகராய்ச் செருக்கித் - தம்மை
     நானிலம் வந்துள்ள வானவர் என்னாரே
(அந்தணர்)