|
273. மதுரைத் திருப்புத்தூர் |
|
உயர்திரு. ஆறுமுகம்பிள்ளை |
'சுதேச மகமதல்லி' என்ற மெட்டு வகை |
ப. |
| ஆறுமுகம் தமிழ்க் களித்த வகை | | ஆயிரத் தோருருபா என்ற தொகை | | மாறுமுகம் இன்றி மலர்ந்தநகை | | மாயிரு ஞாலமே மகிழுந் தொகை |
|
(உரைப்பாட்டு) |
| குலமத கட்சிச் சார்பாக வன்றிக் | | குமரித் தமிழ்க் கென்றொரு பழஞ்சல்லியும் | | கொடாத இந்தக் காலத்திலே | | புலமையிலானும் பொற்கிழி பெற்றதிருப் | | புத்தூர்ச் செந்தமிழ்ப் புரவலன் ஆறுமுகம் | | புகழொடு நிலவுக ஞாலத்திலே. |
|
274. மதுரைமாநகர் |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
1 |
| மதுரைநன் மாநகர் மதிக்குலக் கோநகர் | | மாநில மெங்கணும் தானிலையே நிகர் | | மதியணிந் தான்மலை மகளொடு மகன்பகர் | | மணிமொழி யெனுந்தமிழ் அணிகள் புலவர்நுகர் | | மன்றமும் நின்று வளர்ந்து - தண்டமிழ் நன்று கிளர்ந்து | | மதிதிகழ் பனுவல் பிறந்த - மறைபுகழ் குறளுஞ் சிறந்த (மதுரை) |
|
2 |
| பார்க்குள் உயர்விலைப் பருமுத்தம் சுந்தர | | பாண்டியன் பாதமும் பூண்டன என்றுமுன் | | மார்க்கோ போலோசொன்ன மாட்சிமைதான் என்ன | | மயங்கிவிண் ணோஎன்ன நயங்களெல்லாம் மின்ன | | நாகரிகம் பண்பாடு - மாநகரும் இல்லை ஈடு | | நளினமும் உணவுமிருந்து - நடனமும் இசையும் விருந்து (மதுரை) |
|