பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்227

3
அறுபத்து நால்விளை யாடல்க ளைத்திரு
     அடியவர்க் காய்ச்சிவன் அருளிச்செய் தான்இவண்
மறுவுற்ற கோல்நிமிர் மாநெடுஞ் செழியனும்
     மன்பெருந் தேவியும் மடிந்தனர் தெரியுமுன்
மன்பதை இன்பொடு வாழ - அன்புறு நன்னடு நீள
மகிழ்தரும் உயிரென வந்து - மதிபரசு லகுபுரந்த
(மதுரை)
4
தகுந்ததன் றேதமிழ் தானெனக் குயக்கொண்டான்
     தருக்கி நக்கீரனால் தணிந்தனன் பெருமடம்
மிகுந்த பண்டாரகர் மெ. சுந்தரம் முதல்
     மேதகை யோர்தமிழ் தீதற வுறும்இடம்
மேனகை யரம்பைநாண - மேனிலம் புரிந்தே காண
மழலையங் கிளிகுயில் மயிலும் - மழறு முத்தமிழ் முறை யிலும்
(மதுரை)
275. மாந்தன் செருக்கடக்கம்
'வனசாட்சி' என்ற மெட்டு
பண் - இசைந்த பண்ணிற் பாடுக
தாளம் - முன்னை
ப.
செருக்கேனோ - சிறுதகை மாந்தனே
உ.1
சுருக்கிய நாளிலும் சோர்பிணி யூறு
     சூழ்கடல் மீனுறும் ஆண்டில்ஐந் நூறு
பெருக்கம் ஐயாயிரம் பெறும்மரம் தேறு
     பெரியவன் நானென்று பேசல்எவ் வாறு?
(செருக்)
2
கோழி புறாவொடு குருவிகள் கிள்ளை
     கொத்தினும் ஊண்கெடல் சற்றுமே இல்லை
நாளுமே குளிப்பினும் நன்குமூ வெல்லை
     நம்பியும் தொடுவது நலங்கெடும் ஒல்லை
(செருக்)