பக்கம் எண் :

228இசைத்தமிழ்க் கலம்பகம்

3
ஈக்களின் எச்சிலும் இனியசெந் தேனாம்
     எறும்புறும் பதனீரும் ஏற்றது தானாம்
மாக்களில் நாயும்வாய் மடுத்தது தீனாம்
     மாந்தனின் கைபடின் மறுப்பதும் ஏனாம்
(செருக்)
4
ஆவிடு சாணமும் அணிமனை மெழுக்கு
     அதன்சிறு நீருமே அரிவையர் விழுக்கு
கோவிலில் தெய்வமும் கோவைந்து முழுக்கு
     குலவனின் வியர்வையும் குலவறும் அழுக்கு
(செருக்)
5
நன்றியறி வுடைமை நாயில் அமைத்தான்
     நல்லொழுங் கைஅணி செல்லெறும் புய்த்தான்
கன்றிய மானமும் கவரியில் வைத்தான்
     கரைந்துற வாடலைக் காக்கையில் தைத்தான்
(செருக்)
276. பொங்கல்
'திருப்பரங்கிரிவாசா' என்ற மெட்டு
ப.
தமிழனுக் கொருதிருநாள் - பெருந்
தைப்பொங்கல் என வருநாள்.
உ.1
அமுதமும் புதிரியும் அடுகலம் பொங்கும்
     அழகிய கோலங்கள் அறிவொடு தங்கும்
கமுகமும் வாழையும் கன்னலும் தெங்கும்
    காய்தரு நெல்லொடு காண்வரும் எங்கும்
(தமிழனுக்)
2
மங்கையர் கூந்தலில் மலரும்பே ரரும்பு
     மகிழுறு சிறுமகார் வாயெல்லாம் கரும்பு
பொங்கலிற் பலவகை பொலிந்திடும் பரும்பு
     புலவர்செந் தமிழ்செவிப் புலனுற விரும்பு
(தமிழனுக்)