பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்229

3
கண்டகம் நிறைந்திடக் கறவைகள் கறக்கும்
     கண்ணுப்பீ ளைவேம்பு கருதவே சிறக்கும்
மண்டுறு பசியென வழங்குசொல் மறக்கும்
     மருவுதை பிறந்திடின் வழியது திறக்கும்
(தமிழனுக்)
4
முல்லையில் மதமிக முழங்கும்கொல் லேறு
     முதுகுடி மறவரும் முன்னுவர் வீறு
தொல்லைநல் வழக்கமே துணையுறு பேறு
     தூய தமிழர்விழா துணிந்திது கூறு
(தமிழனுக்)
5
இரப்பவர் அரையிலும் இருக்கும்புத் தாடை
     எழிலுறு கணிகையர் ஏறுவர் மேடை
பரப்பியே வரும்வளி பசுமஞ்சள் வாடை
     பரிந்தெடு நோன்புநூல் படிமையின் சாடை
(தமிழனுக்)
277. எறும்பின் ஏற்றம்
'இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்' என்ற மெட்டு
1
சிற்றுயி ரானநற் சிற்றெறும்பே
     செவியுங்கண் ணும்உனக் கில்லையென்பார்
கற்றது நீஎந்தக் கல்லூரியில்
    கலைஞரும் நாணியே தலைவணங்க.
2
ஒற்றரை முன்னுற உய்த்தறிந்து
    ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்துசென்று
உற்ற பொருள்கொள்ள ஒற்றுமையாய்
     ஓத்துழைக் கும்மிக உன்இனமே.
3
மாரிநாட்கு முன்னே சேர்த்துவைத்து
     மற்றதை அன்றன்று வாய்மடுத்து
பேரும் பெரும்பொருள் சேரத்தள்ளும்
     பெருந்திறல் உன்இனம் பெற்றுள்ளதே.