|
2 |
| பொலங்கல் வளையல் சிலம்புடனே பலவகை யணிகளும் கலகலெனச் | | சலங்கை கொஞ்சக் கடிகையென ஒலியிரட்டிச் சலசலசலவென (ஆடு) |
|
3 |
| கால்வலிமையும் கைவலிமையும் மேல்வலிமையும் உண்டாகும் | | ஞாலம்நெடிது வாழநலமும் சாலமகிழ்வும் நன்றாகும் | | கேளிரு பெற்றோரும் கேளென வுற்றோரும் சீரிய மற்றோரும் | | கெழுதகையாய் களிமிகுவர் கிளர்தரு திருவருள் துணையுடன் (ஆடு) |
|
280. கற்புடைப் பெண்ணே நற்பெரும்பேறு |
|
'உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற மெட்டு |
ப. |
| பெண்மணியிற் சிறந்ததொரு பேறும் இங்குண்டோ |
|
உ. 1 |
| மண்முழுதும் ஆளும்பெரு மாண்பு பெற்றாலும் | | மனையாளுங் குலமகட்கே தினையும் ஈடாமோ. (பெண்) |
|
2 |
| தன்னையேதான் காத்துப்பின்தன் தலைவனைப் பேணித் | | தகைசான்ற வுரைகாத்துத் தளர்ச்சியுறாத (பெண்) |
|
3 |
| புகழ்விரும்பும் மனைவியுளம் பொருந்தி வரினே | | இகழ்வார்முன் பெருமைபெறும் ஏற்றுநடையே (பெண்) |
|
4 |
| திண்ணமுறுங் கற்பரசி தீந்தமிழ் பேசித் | | திறமாகக் குழந்தைகளைத் தேற்றி வளர்த்தால் (பெண்) |
|
5 |
| வள்ளுவரே தெள்ளியுரை வாய்மொழி யீது | | எள்ளாமல் இவ்வுலகில் இன்பம் பெறுவீர். (பெண்) |
|