|
281. உழவன் உயர்வு |
|
'சயசயகோ குலபால' என்ற மெட்டு |
பண் - பைரவி தாளம் - ஈரொற்று |
ப. |
| உழவன் எங்கும் உயர்ந்தோனே | | உலகருத்தும் உணவோனே | | தளராதே உழைப்போனே | | தனியுரிமை உடையோனே. |
|
உ.1 |
| விருந்தோம்பும் வேளாண்மை வியனுலகில் மரபாகும் | | மருந்தாகி நடுவூருள் மருவும்நல்ல மரமாகும் (உழவன்) |
|
2 |
| ஐம்புலத்தும் இல்வாழ்வார் அனைவருக்கும் அளித்துதவி | | ஐந்நிலத்தும் பொருள்மாற்றே ஆற்றும் கூட்டுறவாளி (உழவன்) |
|
3 |
| அந்தணரின் அருந்துறவும் அரசினரின் ஆள்வினையும் | | வந்தபொருள் வாணிகமும் வளர்அறிவும் தான்வனையும் (உழவன்) |
|
282. மக்கள்தொகை மிகையால் தொல்லை |
|
பண் - காப்பி தாளம் - முன்னை |
ப. |
| இனிநல்ல காலமே இல்லை - மக்கள் | | இனப்பெருக் கால்மிக எய்துவர் தொல்லை |
|
உ.1 |
| கனிதருஞ் சோலையும் கழனியும் ஒல்லை | | கரந்து நகர்விரிவு காணுவ இல்லை | | இனிதெனப் பாலையுந் திருந்திய எல்லை | | இடம்பல வுணவுகள் விளைவதற் கில்லை (இனி) |
|