பக்கம் எண் :

234இசைத்தமிழ்க் கலம்பகம்

2
நாவலந் தேயமே நாற்பானைங் கோடி
     நானிலம் முழுவதும் நானூறு கோடி
தாவுமன் பதைத்தொகை தகுதிமேற் கூடி
     தடுக்காவிடின் இடுக்கண் அடுக்குவ கோடி
(இனி)
3
பக்கத்து நாட்டினர் படர்ந்திங்கு மிகுந்தார்
     பாக்கித்தான் திபேத்தரும் சேர்க்கவே புகுந்தார்
அக்கரை நிலத்தமிழ் மக்கள்மீண் டுவந்தார்
     அனைவர்க்கும் ஆண்டுதொறும் பிள்ளைகள் பிறந்தார்
(இனி)
4
கல்லூரி யில்இடம் கற்கவும் இல்லை
     கற்றபின் வேலையும் பெற்றிடற் கில்லை
எல்லாரும் வாழவே எதுவு மில்லை
     இட்டிய வுரிமையும் விட்டிடும் எல்லை
(இனி)
5
உணவிற்கு வந்ததே ஒருபெருந் தட்டு
     உடமையும் பலவகை உற்றது முட்டு
இனவுணர் வால்எங்கும் எழுந்தது கட்டு
     இறந்திடும் போர்வரின் எல்லாமே பட்டு.
(இனி)
283. மணமக்கள் வாழ்த்து
பண் - சிந்து பைரவி
தாளம் - முந்து
ப.
மங்கலம் நீடியே மணமக்கள் வாழி
நன்பொருள் கூடியே நலமே நீடூழி
து. ப.
எங்கணும் நிறைகின்ற இறைவனை நாடி
இல்லறம் தரும்பல இன்பங்கொண் டாடி
(மங்கலம்)