பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்235

திங்களின் வழியெனும் தென்னவன் சார்ந்த
தீந்தமிழ் உலகினில் தெருவெலாம் முழங்க
வங்கநற் கலமென வாழ்வினில் நீந்த
வள்ளுவன் பொதுமறை வழிவழி வழங்க
(மங்கலம்)
284. தமிழ் வாழ்த்து
பண் - (காப்பி)
தாளம் - ஒற்றை
ப.
வாழிய வேங்கடந் தென்குமரி
வைகிய ஆயிடைச் செந்தமிழே
உ.
வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே
விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே
வேறுபல் நூல்தமிழ் வீறுகவே
ஏழிசை நாடகம் எல்லாம் தமிழ்ஆக
இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக
இந்தியும் செல்லுக வந்தவழி.
285. தமிழர் வாழ்த்து
பண் - கலியாணி
தாளம் - முன்னை
ப.
செந்தமிழ் மக்கள் எங்கும் சீராய் நீடு வாழிய.
து. ப.
முந்துபண்பாடு கண்ட முத்தமிழோர் வாழிய
(செந்)
உ.
எந்தவூருஞ் சொந்தவூர் எல்லாரும் நல்லினம்
ஏத்தும் கடவுள்ஒன்றே என்னும் நல்லோர்வாழிய
(செந்)