தாளம் - முன்னை
1 |
| வாழ்க தமிழகம் வழங்க உரிமைகள் | | வீழ்க நன்மழை விளைக நிலமெலாம் | | ஆழ்க அறிவியல் அமைக நன்பொறி | | சூழ்க நண்பெனச் சுலவு நாடுகள். |
|
2 |
| பல்கு ழுச்செரு பாழ்செ யுட்பகை | | கொல்கு றும்பொடு குலங்கள் ஒழியவே | | கல்வி பரவுக கலைகள் வளருக | | செல்வம் பல்வகை செறிக எங்கணும். |
|
3 |
| பசியும் பிணியும்வன் பாடும் வறுமையும் | | நசிய முழுவதும் நல்ல ஆட்சியால் | | கசியும் அன்பொடு கருதும் அறவினை | | வசிய மாம்பெரு வண்மை நண்ணவே. |
|
4 |
| உழவு கைத்தொழில் ஓங்க வணிகமும் | | விழவு மேம்பட விஞ்ச இன்பமும் | | முழவுத் தோள்வலம் முதிர்க மறவரே | | குழவுத் தன்மையைக் கொள்க துறவியர். |
|
5 |
| புரியுந் தொழிலெலாம் பொறியி னாகுக | | பரியுங் காளையும் பாடு நீங்குக | | பெரிய குடும்பமாய்ப் பிறங்கு முலகிலே | | பிரியுந் தமிழகம் பெருமான் அருளவே. |
|