|
287. இந்திய ஒன்றிய வாழ்த்து |
|
'ஜனகணமன' என்ற மெட்டு |
1 |
| இந்திய ஒன்றியம் இலகியே வாழி | | ஏதமில் லாதுநீ டூழி | | தென்றிசைக் குமரிமு னைமுக முதலே | | வடதிசைப் பனிமலை வரையும் | | தங்கிய பலமுத் தரமுள நாடும் | | தழுவிய மதக்கோட் பாடும் | | நிறமொழி யுடைநடை யூணும் | | திறமிகு குலமும்வே றேனும் | | இனமெலாம் ஒருவகை காணும் | | இந்திய ஒன்றியம் இலகியே வாழி | | ஏதமில் லாதுநீ டூழி | | இலகே இலகே இலகே | | இலகியே நிலவுக வே. |
|
2 |
| இந்திய ஒன்றியம் உலகமே நிலவ | | இலகிய கதிரென நிலவ | | கீழையர் முழுவதும் கீழைய ரல்லர் | | மேலையர் மேலைய ரல்லர் | | அறிவியல் துறையதில் பெரியவர் குடவர் | | ஆவியின் வளர்ச்சியில் குணவர் | | அணுவியற் குண்டுகள் நன்றோ | | அழிபகை அஃறிணை யன்றோ | | இழிதகை ஒழிகவே இன்றே | | எங்கணும் ஒருவனே இறைவனென் றெண்ணி | | இன்புறு தமிழியல் நண்ணி | | இலகே இலகே இலகே | | இந்திய ஒன்றியமே. |
|