|
288. ஒன்றிய பன்னாட்டின வாழ்த்து |
|
'மங்களஞ் செழிக்கக் கிருபையருளும்' என்ற மெட்டு |
ப. |
| பாரிலே ஒன்றிய பன்னாட்டினம் நெடும் | | பல்லாண்டு வாழவே. |
|
அ.1 |
| சேரவெல்லா நாடும் ஒன்றாகவே | | செற்றமில் லாமலே ஒற்றுமையாய் | | ஓர்இனம் எனவே உலக ஆட்சிபெற்றுச் | | சீரிய அமைதி செம்மையாய் நிலைக்கத் | | தீய வணுக்குண்டு தேரும் பயிற்சிகள் | | தீரவும் ஒழியவே. (பாரிலே) |
|
2 |
| எப்பொழு தும்இரு நாட்டிடையே | | சச்சரவு வழக்கொன் றிருந்தால் | | தப்பித மாகவே தருக்கிப் போரிடாமல் | | செப்ப மாகப்பிறர் தக்க நடுத்தீர்ப்புச் | | செப்பிய முறையில் ஒப்புரவாகியே | | உட்பகை தீரவே. (பாரிலே) |
|
289. உலக வாழ்த்து |
|
'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற மெட்டு |
ப. |
| வாழ்க! வாழ்க! | | வையகத் தாரெலாம் வாழ்க! |
|
து. ப. |
| கீழையர் மேலையர் வாழ்க! - சீர் | | கிளர்பல நாடரும் வாழ்க! | | ஏழையர் மாழையர் வாழ்க! - நேர் | | எந்நிறத் தாருமே வாழ்க! (வாழ்க) |
|