பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்239

உ.1
பரவெளி சுற்றிப் பறந்து
படுகுழிச் சுரங்கப் பணிசெய் தாலும்
இரவினில் கருங்கடல் தனித்திருந் தாலும்
ஏதமில் லாமலே வாழ்க!
(வாழ்க)
2
மொழிவெறி குலவெறி மதவெறி யெல்லாம்
முற்றிய நாட்டு வெறியுடன் நீங்கி
வழிபடு கடவுள் ஒன்றே யென்றதை
வணங்கியே யாவரும் வாழ்க!
(வாழ்க)
3
பசிபிணி பகையே பறந்திட வேண்டும்
பாரெலாம் ஓரர சாகவே வேண்டும்
பாழ்வெடிப் பயிற்சி நீங்கவே வேண்டும்
பண்புடன் அமைதியும் வாழ்க!
(வாழ்க)
290. பண்டைத் தமிழுணர்ச்சி
(இசைந்த மெட்டிற் பாடுக.)
ப.
தமிழுணர்ச்சி யாலே எல்லாம்
    தாங்கினமுன் தமிழ்ப் பெயரே
அமரர் சூழ்ச்சியாலே பின்னே
     அயற் பொருளெல்லாம் பிற பெயரே.
(உரைப்பாட்டு)
கரும்பு மிளகாய் உருளைக்கிழங்கு நீலக்
     கடலை புகையிலை முந்திரிசெந் தாழை
கதலிச்சி அண்டிமா இதள் கிள்ளை
     விரும்பு குதிரை நெடுங்கழுத்தல் வான்கோழி
விரையும் புகைவண்டி மிதிவண்டி முதலியன
     வேற்றுப் பொருட்பேர் தமிழ்ச்சொல்லே
          செந்தாழை - அன்னாச்சி. கதலிச்சி - கர்ப்பூரம் அண்டிமா - மரமுந்திரி. இதள் - பாதரசம். கிள்ளை - சாதிபத்திரி. நெடுகழுத்தல் - ஒட்டகம்