|
2 |
| தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப்புலவர் | | தமிழை முன் காத்தல் தலையாய கடமை | | இலையெம் பணியே யிந்தியை யெதிர்த்தல் | | இது தி.மு.க. வே எனவுண்டோ இடமே (என்ன) |
|
295. மதுரை அறுவாட் படுகொலை |
|
பண் - புன்னாகவராளி தாளம் - முன்னை |
|
ப. |
| இது காந்தியமா? படு காலியமா? |
|
உ.1 |
| கயற்கண்ணி யாண்ட மதுரையிலே | | கயற்கொடி பறந்த மறுகினிலே | | குயக்கொண்டான் சாகப் பகல்வலிமைக் | | குலத்தமிழ்க் கீரன் நகரினிலே (இது) |
|
2 |
| பாண்டியன் பைந்தமிழ்ப் பாடல்களே | | ஈண்டிய மாடக் கூடலிலே | | மூண்டிரு சமயப் போர்முனையில் | | முழுதும் தமிழ்வெல் லூர்தனிலே (இது) |
|
3 |
| பேரா யத்தின் அலுவலகம் | | பெருந்தமிழ்ப் பற்றைக் கொலுங்கழகம் | | தூராய்க் கொள்ளும் நெறிமுறையாம் | | துன்புறுத் தாமை கடுஞ்சிறையாம் (இது) |
|
4 |
| அமைதியாய்ச் சென்ற மாணவரை | | அறுவாள் வெட்டே ஆனவரை | | இமையவ ருங்கண் இமைத்தபுரை | | இறவாப் பழியுல கிறுதிவரை. (இது) |
|