|
5 |
| தமிழர் என்னும் பெரும்பெயரைத் | | தாங்கித்திரியும் உருவங்காள்! | | இமிழ்கடல் பொங்கி எச்சரித்தும் | | இன்னும் உணரா நன்மரங்காள். (இது) |
|
படுகாலி - படுக்காளி |
296. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம் |
|
'கூடி மருந்தரைப்போம்' என்ற மெட்டு |
ப. |
| இதுவே விடுதலைப் போர் - இந்தியை | | இந்நாட்டில் ஒழித்தேதீர் - ஏ தமிழா! |
|
1 |
| ஆங்கிலர் ஆட்சிமுன் நீங்கி | | அடைந்தனர் விடுதலை வடவர் | | ஈங்குநாம் விடுதலை வேண்டின் | | இந்தியை ஒழித்திட வேண்டும், வேண்டும் (இதுவே) |
|
2 |
| இருமொழித் திட்டமே இனிமேல் | | இந்நிலம் நிலவுற வேண்டும் | | அருகிய வாழ்நாள் யாண்டும் | | அறிவியல் கற்றிடவேண்டும், வேண்டும் (இதுவே) |
|
3 |
| மந்திரிப் பதவியை வேண்டி | | இந்தியைப் புகுத்தி ஈண்டும் | | செந்தமிழ்க் கேகுழி தோண்டும் | | மந்திகள் ஒழியவேண்டும், வேண்டும் (இதுவே) |
|