| 
296. தொண்டர்படைப் பணி  | 
 | 
(இசைந்த மெட்டிற் பாடுக)  | 
'நட்ட கல்லைத் தெய்வ மென்று' என்னும் செய்யுளோசை.  | 
1  | 
 | தொண்டர் கள்தி ரண்டு சென்று கண்ட வூரை யண்டுவீர் |   | தண்ட மிழ்த்தி றங்கள் நன்று விண்டு ரைகள் செய்குவீர் |   | இந்தி யிங்கு வந்த பின்னே என்ன தீங்கு நேர்ந்திடும் |   | என்று மக்கள் கண்டு கொள்ள நன்றெ டுத்துக் கூறுவீர். |  
  | 
2  | 
 | நூற்று மேனி எண்ப தாகு மாக்க ளின்று தாமெதும் |   | ஏட்டை யேபா ராது கையை நாட்டு கின்றோ ராதலால் |   | கூட்டி நல்ல கொள்கை யென்று கேட்கு மாறு கூறுவர் |   | வேற்ற வர்தம் இந்தி செய்யும் கேட்டை நன்று காணவே. |  
  | 
3  | 
 | பட்டி னங்கள் மாநகர்கள் பாக்கம் எங்கும் செல்லுவீர் |   | விட்டி ருக்கும் விடுமுறைகள் வேண்டு நன்மை கொள்ளுவீர் |   | பட்டி தொட்டி யெங்கும் சென்று பற்ப லர்க்குஞ் சொல்லுவீர் |   | பட்ட தொல்லை பற்றி யூக்கம் விட்டி டாது தெள்ளுவீர். |  
  | 
298. தீக்குளித்த வேறு நால்வர்  | 
 | 
| பண் - நாதநாமக்கிரியை  தாளம் - முன்னை  | 
 | 
ப  | 
 | தீக்குளித்தே யிறந்தார் - நால்வரும் பின் |  
  | 
து. ப. 1  | 
 | தீக்கெம தூனுடல் தீந்தமிழ்க் கின்னுயிர் |   | ஆக்கினம் எனச்சிவ லிங்கம் அரங்கநாதன்  (தீக்)  |  
  |