பண் - பந்துவராளி தாளம் - முன்னை |
ப. |
| தீக்குளிக் காதீர் தீந்தமிழ்த் திறமே | | தீழ்ப்புறும் அதனால் தென்றமிழ் மறமே |
|
து. ப. |
| தாக்கிய இந்தி தகர்ந்துபோம் புறமே | | தம்பிரான் அருளால் தமிழ்வெற்றி பெறுமே (தீக்) |
|
உ.1 |
| வீணாக எரியிலே வெந்துநீர் சாவதால் | | விரும்பிய பயனின்றி விளைவது நோவதே | | மாணாக வெல்வழி மறத்துறை போவதே | | மதிதகு புகழ்தரும் மகிழுவர் தேவரும் (தீக்) |
|