பக்கம் எண் :

246இசைத்தமிழ்க் கலம்பகம்

300. புத்திரசிகாமணி
பண் - வசந்தா
தாளம் - முன்னை
ப.
புத்திர சிகாமணி புரிந்தது மாபணி.
து. ப.
சித்திர வாகையணி செயஅவற் கேயினி
(புத்திர)
உ.
முத்தமிழைக் காக்கவே முனைந்தவூர் காவலன்
முதலமைச் சின்மிஞ்சும் முதுகுடி மாவலன்
இத்தரையில் இந்தியே ஒழிகெனும் நாவலன்
இதைவலி யுறுத்தியே இருகுண்டும் ஏவலன்.
301. இற்றைத் தமிழன் இழிநிலை
'எம்டன் போட்ட குண்டு' என்ற மெட்டு
ப.
தமிழைச் சுட்டுக் கொல்ல - ஓ
தமிழன் கெட்டான் சொல்ல
உ.1
ஊர்காவல் துறையில்தான் ஊழியம் செய்தாலும்
சீராளன் தாய்மொழியைச் சிதையானே ஒருகாலும்
(தமிழைச்)
2
தாயையுங் கொன்றொருவன் தாமரைப் பொன்பெறினும்
மாயாமல் இந்நிலத்தே மருவும்நிலை தான்வருமோ
(தமிழைச்)
3
ஒழுங்கமைதி காப்பதன்றோ ஊர்காவற் கடமை யெல்லாம்
ஒழுங்கின்றி முதல்வரையும் உட்புகுந்தே அடித்த தென்னே
(தமிழைச்)
4
மாணவரே இந்நிலையில் மாண்பான தமிழ்மறவர்
நாணமின்றி அவரையின்று நாகரெனக் கொலைபுரிவர்
(தமிழைச்)