பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்67

உரைப்பாட்டு
தனிப்பா லென்று சொல்வது தருபவர் பாலொடு தண்ணீர் கலந்த பின்பே
தனித்தமி ழென்று சொல்வதும் தமிழொடு பிறசொல்லைத் தகவிலார் கலந்த பின்பே
ப.
கடன்கொள்ளு மொழிகளே கடுகி வளருமென்று கழறுவ ரேசிறியார்
வடமொழிகளுக் கெல்லாம் வாழ்வருள் தமிழின்சொல் வளந்தனை அவரறியார்
(உரைப்பாட்டு)
பெருஞ்செல்வன் வேண்டாது பிறர்பாற்கடன் கொள்ளின்
        பெயரும் பொருளும் கெடுமே
பிறசொல்லை வேண்டாத தமிழுங் கடன்கொண்டு
        பெரிதுங் கெட்டது திடமே.
ப.
தமிழைக் கெடுப்பதே தம்பெரும் பணியெனத்
         தாங்கியுள்ளார் சிலரே
அவரைத் தெரிந்துகொண் டகன்று விலகிநிற்க
         அருந்தமிழ் ஆர்வலரே.
உரைப்பாட்டு
பெற்ற தாயைக் கொல்லுவதும் பெரிதுந் தகுமென்பார்
        பிறந்துளார் இவ்வுலகிலே
உற்ற தமிழைத் தள்ளுவதும் உகந்த தென்பார் தீயவழி
        உறுபொருள் சேர்ந்த அளவிலே.
ப.
கலவை மொழிதன்னைக் கைவந்த தமிழென்று
         காட்டுவர் போலியரே
கலந்துள்ள பிறமொழிச் சொற்களை யகற்றிடின்
        காண்பது கால்தமிழே