பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 119

9 இ

9
இயேசுவின் இளமை

‘தினமணி வம்ச‘ என்ற மெட்டு

ப.

 
   
   இளமையில் ஏசு இலகவே பெற்றோர் ஏவலில் நின்றார்  
   

து. ப.

 
   
   எளியரெ னாதுதம் இறைமையு மெணாது  
   குலவினை செய்தொரு குற்றமூ ளாது

(இளமை)

   

உ.

 
   
   பெற்றவர் தகைமையைப் பிறர்வியந் தேத்த  
   பெருந்தகை பேணிப் பெரியவர் பணிந்து  
   நித்தனருள் ஞானம் நிலத்தவர் தயவினும்  
   நிறைமதி நீர்மை நீட வளர்ந்தனர்

(இளமை)

10
திருமுழுக்கு

'சங்கற்பமே' என்ற மெட்டு

ப.

 
   
   யோர்தான் நதி யோவன்னான் சம்மதி  
   யூதகுல பதி யபிடேக வாதி  
   

து. ப.

 
   
   பாரில் தேவவதி1 பண்படு உந்திதி  
   பரம்புக மனந்திரும்புவார் கதி

(யோர்தான்)

   
   வானிறப் புறாவின் வடிவாய்த் தூயாவி  
   வந்திறங்கித் தேவ மைந்தன்மேற் குலாவி  
   வானகப் பிதாவும் வாசகமொன் றேவி  
   வணங்குந் திரியேக திறம் மேவியே

(யோர்தான்)

   

1. வதி - வழி