பக்கம் எண் :

120செந்தமிழ்க் காஞ்சி

11 ஏசு ச

11
ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது

‘ப்ரோவ சமைய‘ என்ற மெட்டு

ப.

 
   
   வனமே வாசம் வானப்பிர தேசம்  
   

து. ப.

 
   
   அணவுந் தேவேசும் ஆவியுப தேசம்  
   உணரும் பிரகாசம் ஊழியப்பிர வேசம்

(வனமே)

   

உ.

 
   
   உண்பதில் நாற்பானாள் உபவாச மேனாள்  
   உலகத்தே வானான் உன்னதன்பாற் போனான்  
   தின்பொருளி லிச்சை தேவனைப் பரீட்சை  
   தீயபேய ருச்சை தேறி யேசு ரட்சை

(வனமே)

12
கானாவூர்க் கலியாணம்

'தாதாபாய் நவரோஜி' என்ற மெட்டு

ப.

 
   
   கானாவூர்க் கலியாணம்  
   கம்பீ ராதன சம்பா கோதனக்

(கானாவூர்)

   

உ.

 
   
   காணாது கந்த ரசம்  
   ஆனாவிருந்து நிசம்  
      ஆண்டவா அகம் ஈது குறையென  
      வேண்டி னார்மிக ஏசு பரமனை

(கானாவூர்)

   

உரைப்பாட்டு

 
   
   ஆறு சாடிகளின் நீரை அருமை ரசமாகச் செய்த  
      அற்புதமா மகிமைத் தேவன்