பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 121

   நீறு மூடுந் தழல்போல நிமலனாம் அவதாரன்  
   நித்திய மாவழி மெய்ச்சீவன்  
   

உ. தொடர்

 
   
   ஏதேனில் ஆதி மணம்  
   ஏவாளோ டாதம் முனம்  
   ஈசனே குரு தந்தையும் மாமனும்  
   ஏசுவே திரு இந்தமகா மணம்

(கானாவூர்)

13
மலைப் பிரசங்கம்

செபிக்கும் முறை

'வாழலோ சகிப்ரோ' என்ற மெட்டு

கீரவாணி - ரூபகம்

ப.

 
   
   செயம்பெறச் செயவே செபமே  
   செகமே யலகை தீர  
   

து. ப.

 
   
   புயபல தானியல் மனமே  
   புவன மன்னும் போகும் பின்னே

(செயம்)

   

உ.

 
   
   அதிகவாச கார்த்தமே அறையா திருமின் அவையிலென்றும்  
   அகவுறை யாண்டவ ரறிவார் அறிய துதிகளே யமையும்  
   இதர சிந்தனை விண்டறவே ஏகி நீட அந்தரங்கம்  
   இறையைத் தரையிற் கும்பிட் டேத்தி  
   இளகியன்பு மல்கி நின்றே

(செயம்)