கற்பாறை
நிலத்து - விதைகள் |
கடிதில்
முளைத்தன மண்காணாமல் |
|
வெயிலேறின
போதோ - அவைகள் |
வெந்து
கருகினவே வேரின்றி |
|
முள்ளா ரிடம்விழுந்த - விதையும் |
முளைக்கமுள் வளர்ந்ததை நெருக்கினதே |
|
பண்ணார்
நன்னிலத்து - விதைகள் |
பத்தும்நூறு
மாகப்பெரும் பலன்தந்தன |
|
விதைப்போன்
மனுடமகன் - அந்த |
விதைகளும்
விண்ணரசின் வசனங்களே |
|
நிலமோ
மனிதர்மனம் - அதுவும் |
நிகழ்தரும்
நால்வகை நிலையறிவீர் |