பக்கம் எண் :

134செந்தமிழ்க் காஞ்சி

   தாசரும் முனங் கூறிய தீர்க்க
   தரிசனம் வந்ததடுத்து
 
   கோமான் ஏசுவைக் காய்பாவின் மனை
   கொண்டுபோய் யூதர் சேர்த்தார் - அங்குக்
   கூடினார் சபை மூத்தார் - உடன்
   கொல்லவே வழி பார்த்தார் - சிறு
   குற்றமேனு மகப்படாமையால்
   கூறிப்பொய்களைக் கோர்த்தார்.
 
   ஆலயக்குறை கூறினார் பரன்
      அமைதியாகக் காய்பாவும் - அவர்
      அரசரீகம் வினாவும் - அவர்
      ஆமென்ற உரை பாவம் - என
   ஆடையைக் கிழித் தேசுவை மரத்
      தறைய மூப்பரை யேவும்
 
   காதகப் பெருயூதம் செய்தது
   காரியத்தாறு மாறும் - ஏசு
   கன்னத்தில் எச்சில் நாறும் - அவரைக்
   கடிந்து குட்டிடுந் தோறும் - ஞானக்
   கண்ணால் யார்வதை பண்ணி னாரென்று
   கண்டு சொல்லெனக் கூறும்.
 
   காய்பா வின்மனை யோர மாய்க்குளிர்
      காய்ந்த பேதுரு இறையே - என்றுங்
      கண்ட தில்லென்ற மறையே - மிகக்
      காணவே மூன்று முறையே - கூவுங்
   காலைச் சேவலைக் கண்டு சிந்தினன்
      கண்ணீ ருங்குட நிறையே.