|
பாரிலுள் ளோர்செய்த பாவங்கள் யாவுமே |
| பாரமாக
எய்தப் பாரித்த வேதமே |
| |
| ஆகார
முண்ணாமல் ஆவி யொடுங்கவும் |
| தேகமோ
புண்களால் தேங்கி நடுங்கவும் |
| |
| நித்திரை
யில்லாமல் நியாயம் விசாரித்துக் |
| கட்டியே
கண்களும் காந்தி யெரிவுற்று |
| |
| வையமெய்
பேயுடன் வாகைமல் லாடியே |
| கையயர்ந்து
பின்னே கால்கள்தள் ளாடியே |
| |
| கேடுகெட்
டபவக் கேளைத் தழுவுறப் |
| பாடுபட்
டேவரும் பாரச் சிலுவையைத் |
| |
| தாங்க
முடியாமல் தஞ்சமே வீழவும் |
| ஆங்கொரு
சீமோனை அன்றினர் ஆளவும் |
| |
| கல்வாரி
மாமலை கண்டு சமீபமே |
|
கொல்வாரே கோதில்லாக் குன்றைஎன் பாவமே. |