குருசிற் சிறந்தமிசை மாட்டினர் - ஏசு |
குரிசிற் புரிந்தபிழை காட்டினர் |
கிருபைக் குமரனோடும் இருபக்க மிருசோரர் |
கெழுமச்
சிலுவையறை மேவினர் - வீரர் |
குழுமிப் புரியு நீடு காவலர் - அங்கே |
கேசகம்பித
பாதசாரிகள் |
கீழிறங்கும கேசனேயெனில் |
|
கிருதிற் கோயிலழித்த பின்றைநாள் மூன்றில் |
நிருமிப்
பாயுனை ரட்சி யென்றனர் |
அவரைப் போலவே யூத குரவப் பாரகமூதர் |
இவனிப்போ
திறங்குக நம்புவோம் - இவன் |
அயலுக்கே புரந்த வரம்பினான் - முனம் |
ஆண்ட வன்கரம் நம்பி னானவர் |
வேண்டிலின்று
மிரங்க வேயென |
|
அருகிற் சிலுவையிடச் சோரனும் - அந்த |
அறுமிக்க
மணியாதி நவமுற்ற மணிகாறும் |
அவனிக்கிருள்
பரக்கத் தேவனை - ஏசு |
அகதிப்
படவுரக்கக் கூவினர் - சிலர் |
வகையிற் பழிமொழியைக் கூறினன் |
அகவினா னெலியாவை யென்னவோர் |
மகனறாவுறு காடி தன்னையே |
|
அவருக்கொரு கழையில் நீட்டினன் - அவர் |
அகவித் தமதுயிரை வீட்டினர் |
வலமைத் தேவக நீடு திரையிற் கீழ்வரை கீள |
மகிமிக்கே யதிர்ந்தது கம்பமாய்
- பெரு |
மலைமிக்கே
பிளந்தன துன்பமாய் - பல |
வால மாதவர் உயிர்த்தெழுந்தபின் |
சால மாநகரிடைத் தெரிந்தனர் |
|
மகிமைக்
காரியமாகக் கண்டவர் - இவர் |
அருமைத் தேவகுமாரன் என்றனர் |
சரணப்
பணிவிடைகள் புரியப் பரமனோடு |
சதுரக்
கலிலேயாவை நீங்கின - பல |
மகரக்
குழையமாதர் ஏங்கினர் - கதிர் |
சாயும் வேளை யோசேப்பு நம்பனின் |
காய மோது பிலாத்து வுந்தரத் |