பக்கம் எண் :

140செந்தமிழ்க் காஞ்சி

தய
   தயிலத்தினை மிகுத்துப் பெய்தனன் - ஒரு
       சயிலத்திலே யடக்கஞ் செய்தனன்
   திருடிப் பழகிநாமும் சிலுவைப்பட நியாயம்
   சிரமப் படவே யிந்தத் தூயவர் - என்ன
   கருமப் பதகஞ் செய்ய லாயினர் - என்று
      தேவனே யுமதரசி லென்னையும்
      காவுமே யெனவலது கள்ளனும்
   திருவிற் பெரிய பரதீசிலே - இன்று
   மருவப் பெறுவை யென்றார் ஈசனும்.

32
வலதுபாரிசத்துக் கள்வன் வேண்டுதல்

'ஸ்ரீரகுவர' என்ற மெட்டு

(வேண்டுதல்)

ப.

 
   
   ஆண்டவா உன தடியேனையும்  
   அரசுறும் வேளையில் ஆளாய் சீராளா

(ஆண்டவா)

   

(நெஞ்சொடு கூறல்)

 
   

து. ப.

 
   
   நாமேதம் செய்தம் நன்றாகுந் தண்டனை  
   கோமா னிவரிற் கூறவோர் கோதுமேது

(ஆண்டவா)

   

(பரதீசு பெற்றபின் பரவல்)

 
   

உ.

 
   
   தேவகு மாரா திருஅவ தாரா  
   பாவி யெனக்கும் பரதீ சுபகாரா

(ஆண்டவா)