மூப்ப
ராசாரியர் அறையும் - ஒரு |
முள்ளின் மாமுடி யெள்ளவே பெருங் |
கள்ள னாயினர் வள்ள லேசுவும் |
முன்பு
யூதர் கொண்ட மதமே - முடியும் வரை |
ஒரு பிடியாய் |
முண்டு
செய்து கண்ட வதமே |
பொந்தியுப்
பிலாத்து பதியே - புரையரினம் |
இரைய
மனம் |
போலவே
மயங்கும் விதியே - யூதர் |
புத்திரத்தையே பெற்றதில்லையோ |
எத்திறத்தவர் செற்ற தென்னையே |
புல்லியர்க்கே யிந்த ஞாலமே - புனிதமுள |
இனியகுண |
நல்லவர்க்கோ இல்லை காலமே |
சிந்துர
மிகுந்த காயமே - சிந்தாமணியோ |
நந்தாவொளியோ |
|
சேயிடை
பரந்து பாயுமே - அதைச் |
சிந்தை நொந்து மிகுந்து சிந்தியே |
அந்தி சந்தி விழுந்து வந்தியே |
சீரை
யோடிருந்த வண்ணமே - செந்நீர் பருகிப் |
பின்னே முழுகச் |
சேரும் வெள்ளைத் தூயவண்ணமே! |