பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 149

உ.

 
   
   நிலவுல கேகி நிரப்பொடு2 நிந்தையாகி  
   நிலந்தலை சாய்க்கவும் நிற்கவும் நேரமின்றிச்  
   சிலுவையில் வேதனை சிறந்து பாடுபட்டுச்  
   சிறுமையுடன் மரித்தே தீர்த்தனென் பாவப்பாரம்

(மன்னி)

   

  1. தொட்டு - தோண்டி, கொத்தி. 2. நிரப்பு - வறுமை.

 

43
மெய்த்தெய்வம்

'அருட்சோதித் தெய்வமென்னை' என்ற மெட்டு

பந்துவராளி - ரூபகம்

   நாதாந்தத் தெய்வமென்னை நாடிவந்த தெய்வம்
      நம்பனிடத் துயிரொளியும் நண்ணியமெய்த் தெய்வம்
   ஏதேன்றன் இறைவன்பணி எதிருரைத்த தெய்வம்
      ஈசனடி யார்களுமுன் இசைத்தபெருந் தெய்வம்
   வேதாந்த சூரியனாய் விளங்கியமெய்த் தெய்வம்
      வியனிலத்தில் மாமிசமாய் விளைந்தமகத் தெய்வம்
   போதாந்தம் படவருக்கே புகன்றளித்த தெய்வம்
      பூமியெங்குந் திரிந்துநலம் புரிந்தபெருந் தெய்வம்.
 
   மனந்திரும்பும் அரசுரைவாய் மலர்ந்தபெருந் தெய்வம்
      மறுவுடையு மில்லாமல் வறுமைகொண்ட தெய்வம்
   தினந்தினமும் நடந்துபதம் தேய்ந்துளைந்த தெய்வம்
      சிரஞ்சாய்க்க இடமின்றிச் சிரமமுற்ற தெய்வம்
   இனஞ்சனமாய்ப் பாவிகளை ஏற்றபெருந் தெய்வம்
      ஈனருடன் விருந்துண்ட எளியவரின் தெய்வம்
   சினஞ்சிறிய வருக்குமிகச் சேவைசெய்த தெய்வம்
      சீடரடி கழுவியவர் செருக்கழித்த தெய்வம்.
 
   பட்டினியாய்ப் பசிதாகம் பரந்தெழுந்த தெய்வம்
      பலமான வாரடியும் பட்டபெருந் தெய்வம்
   குட்டிமிகு பாதகரும் குறைவுறுத்த தெய்வம்
      கோரமிகுஞ் சிலுவையிலே கொலையுண்ட தெய்வம்
   மட்டில்பெரும் பகைவருக்கும் மன்னிப்புரை தெய்வம்
      மன்னுயிரைத் தன்னுயிர்போல் மதித்தபெருந் தெய்வம்
   திட்டியிடச் சோரனுமுன் சிறுமைசெய்த தெய்வம்
      திருடனுக்கும் பெரியபர தீசளித்த தெய்வம்.