படமுடியாப் பாடுபட்டே பரிதபித்த தெய்வம் |
பாவியெனக் காருயிரும் பரிந்தளித்த தெய்வம் |
சடமுடனே உயிர்த்தெழுந்த சத்தியமாந் தெய்வம் |
தரிசனமுஞ் சீடருக்குத் தந்தபெருந் தெய்வம் |
படருமொளி மேகமிசை பரத்தெழுந்த தெய்வம் |
பரமவலம் வீற்றிருந்து பரிந்துரைக்குந் தெய்வம் |
திடமுறவே
யெனையாண்ட திருக்குமர தெய்வம் |
திருவருளைச்
சிறந்தளிக்கும் திவ்வியமெய்த் தெய்வம். |
|
தானாகித்
தனியாகித் தழைத்தபெருந் தெய்வம் |
தனக்கெனவா ழாதபெருந் தனிக்கருணைத் தெய்வம் |
கோனாகிக் குருவாகிக் கூறுவிக்குந் தெய்வம் |
கொடியனெனை யாளுகந்து கொண்டாடுந் தெய்வம் |
ஊனாகி
யுயிராகி உள்ளமர்ந்த தெய்வம் |
உடம்பிறப்பு முறையுமெனக் குவந்தளிக்குந் தெய்வம் |
தேனாகித்
தெளிவாகித் தெவிட்டறியாத் தெய்வம் |
திருவலமன்
றாடுகின்ற தெய்வமதே தெய்வம். |