பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 151

   காவு பாரத்தைக் கடிதி லகற்றியே
   தாவம் நீடுயிர்த் தண்ணீரி லாற்றுவென்
   பாவி காளெனப் பரிந்தழைக் கும்பரன்
   ஆவ லெண்ணியும் அறிதியோ மனமே.
 
   பொன்னைத் தானியப் பூமியைக் கானடை
   தன்னைப் பேணிலாத் தற்பரன் எண்மையில்
   உன்னை வேண்டவும் உறழுதியோ நெஞ்சே
   என்னைப் பேதமை இனைய வருளரே.
 
   தூண்டி லின்பமே துவன்று முலகுனை
   ஆண்டு கொள்ளவும் ஆசைப் படுதியே
   நீண்ட இன்பமே நின்னை யுறுத்தவும்
   வேண்டு மேசுவை விடுவதோ மனமே.
 
   விரும்பி யாவையும் விட்டுனைக் கண்கணீர்
   அரும்ப ஏசுவும் ஆனந்த மேந்தினர்
   கரும்பு தின்னவுங் காமறு வாரெவர்
   இரும்பு கல்பிற இளகுவ மனமே.
 
   மலைவ ருந்துயர் மாயுங் கதிர்ப்பனி
   அலைவ ரும்பகை ஆயிரர் என்செய்வர்
   தலைவ ருந்திருத் தள்பவோ தாளினால்
   துலைவ ரும்ஏனம் துன்மன முனக்கே.

45
திருச்சபைக்கு எச்சரிப்பு

சத்திய வேதத் திருச்சபையே

   தவிர் நவையே            கிறித் துவையே           பணி குவையே
 
    பத்தியின் கனியில்லாப் பாழ்மரம் இனியே
   பரசினா லறையுண்டு படர்ந்திடும் வனியே
   அத்திமரம் பட்டதே அளியாது கனியே
      ஐயா இவ்வாண்டு மிந்த மரமே