பக்கம் எண் :

152செந்தமிழ்க் காஞ்சி

இட உர
   இட உரமே           கனி தரமே             எனுஞ் சிரமே
 
      பொறுமை யுடன் கிருபை புகழ்பரி தாபம்
      பொற்பரன் கொண்டபோதே போக்குவாய் பாவம்
      இறுதியி லடைகுவர் எல்லையில் கோபம்
         ஏதுஞ் செய்து மாறாத நீதம்
 
   ஒருபோது            இலைபோதம்            தெளிவேதம்
 
      திருடன்போல் மணவாளன் திடுமென வருவார்
      தெரிந்துகொண் டவருக்கே திகழ்பரந் தருவார்
      கருடன்கண்ட பனிபோல் கலங்குவர் மருவார்
         காலமெல் லாமவர்நிக்கிரகம்
 
   கல்லு முருகும்        எரிநகரம்               துயர் பெருகும்.

46
கிறித்துவை வேண்டுதல்
காப்பி - ஒற்றை

 

   மகிதலந் தனில்வந்த மனுவேலா - பெரு
   மாபாவி களுக்கோர் அனுகூலா
      மறமதை வெறுத்தே
      திறமுடன் பொறுத்தீர்
 
   மலைமிசை திகழ்வரு மறுரூபா - மன
   மாயாதி கடந்த மகதேவா
      மரமுதல் இறந்தே
      பரமதில் சிறந்தீர்
 
   மகிமையில் வருமெழில் மணவாளா - என்றும்
   மாறாத தரும குணசீலா
      மகிழ்பரந் தருவீர்
      புகழ்பெருந் திருவீர்.