பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 153

47 க

47
கிறித்துவின் இரண்டாம் வருகை


சந்தக் குறிப்பு

 

         தான தனன தன தனாதனாதன

 

         தான தனன தன தனாதனாதன

 

         தான தனன தன தனாதனாதன தனதான

 
   
   பாதி யிரவு புயல் பளீர் பளீர் என  
   மீது கடவு பர மகா மகா என  
   மோது முறைமை வரு களா களா வென

அமரோடே

   
   மாதிர முழுவது மடா மடாவென  
   போதென வுதிருடு பொலீர் பொலீ ரென  
   வேது படவு மிடி திடீர் திடீ ரென

வரு நாளில்

   
   மேதினி கலறைகள் படீர் படீரென  
   பாதகர் வயிறகம் பகீர் பகீரென  
   நீதியர் முக முழு நிலா நிலாவென

நகையாக

   
   கோதுறு நரகெரி குபீர் குபீரென  
   மீதல சுகவறை மினா முனாவுற  
   ஏதை யெனையுமுள மெணாதிரேல் ஒளிர்திரு

மணவாளா.

48
பைரவி - ரூபகம்

 

ப.

 
   
   தினகரதீ விரகோடி திகம்பர மாதிரமூடி  
   திரளாய் வானோர் கூடி தேவமா மணமோட  
   

து.ப.

 
   
   தேவரடியவர் சகிதம் தீவிய காகள நாதம்  
   தேவசுதன் திரு மாரதம் தேசோமயமே வாரிதம்

(தினகர)